SELANGOR

சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகளைக் கண்டறிவீர்! ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவு

ஷா ஆலம், மார்ச் 6-

நாடு முழுவதிலும் சட்ட விரோதமாக நெகிழி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலைகளை அடையாளம் காணும்படி நகராட்சி மன்றங்களுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் மூலம் மூடும்படி உத்தரவிடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும் என்று துணை அமைச்சர் டத்தோ ராஜா கமாருல் ஷா ராஜா கூறினார்.

“இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களுக்கு கடந்த மாதம் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் விளக்கமளிக்கப்பட்டது” என்றார் அவர்.

இந்த நெகிழி தயாரிப்பு மூலம் மிகப் பெரிய லாபம் கிட்டும் என்பதால் இந்தத் தொழிற்சாலைகளை எவ்வாறே ஏனும் நடத்த சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்கக் கூடும் என்பதையும் தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :