NATIONAL

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது!

கோலாலம்பூர், ஜூன் 6-

இன்று காலை 10 மணி நிலவரப்படி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் நெடுஞ்சாலை நெடுகிலும், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மத்தியில் இணையும் இலைட் நெடுஞ்சாலை, மலேசிய-சிங்கப்பூர் இரண்டாவது பாலம், பட்டவொர்த்-கூலிம் நெடுஞ்சாலை, சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை மற்றும் பினாங்கு பாலம் ஆகியவற்றில் போக்குவரத்து சீராக இருந்ததாக பிளஸ் மலேசியாவின் பேச்சாளர் கூறினார்.

இதனிடையே, நேற்றிரவு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் 311.8 ஆவது கிலோ மீட்டரில் கொண்டேனா லோரியை உட்படுத்திய விபத்தொன்று நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இடது பக்க சாலை இன்னும் மூடப்பட்டுள்ளதால், அங்கு வாகனங்கள் மெதுவாக நகர்வதாக போக்குவரத்து அறிக்கை தெரிவித்தது.
மற்றொரு நிலவரத்தில், கிழக்குக் கரை நெடுஞ்சாலைகளில் (எல்பிடி 1 மற்றும் 2) போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரிய பேச்சாளர் கூறினார்.
ஆயினும், தலைநகரில் உள்ள கோம்பாக் டோல் சாவடியை நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதாகவும் இது மாலை வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 


Pengarang :