NATIONAL

எரிசக்தி சந்தையில் அந்நிய முதலீடுகளைக் கவர தொடர்ந்து புதுமைகள் ஏற்படுத்தப்படும்! – அஸ்மின் அலி

கோலாலம்பூர், ஜூன் 24-

எரிசக்தி சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் நாட்டின் எரிசக்தி சந்தை புதுமைகளை ஏற்படுத்துவதில் நாடு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பொருளாதார விவகார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
உலகின் மிகப் பெரிய திரவக எரிசக்தி தயாரிப்பு நாடாகவும் நவீன மற்றும் தூய்மையான எரிசக்தி கிடைக்கக்கூடிய சிறந்த நாடாகவும் மலேசியா திகழ்கின்ற போதிலும் எரிசக்தி சந்தையில் தொடர்ந்து புதுமைகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.

எரிசக்தி தேவை அதிகரிப்பை நிறைவு செய்வதற்கான தயார் நிலையில் நாடு இருந்தாலும் எரிசக்திக்கு மாற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு பசுமையான சுற்றுச் சூழ்ல் இருப்பதை உறுதி செய்யவும் நாடு முயன்று வருகிறது என்றும் அவர் சொன்னார்.
“நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள முதலீட்டு வாய்ப்புகளானது தொடர்ச்சியான வர்த்தக நடவடிக்கை சுறுசுறுப்பாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும்” என்று அஸ்மின் தெரிவித்தார்.

 


Pengarang :