KUALA LUMPUR, 18 Ogos — Menteri Hal Ehwal Ekonomi Datuk Seri Mohamed Azmin Ali(tengah) dan timbalannya Senator Dr Radzi Jidin(tiga kiri) tidak melepaskan peluang untuk turut serta dalam larian bagi kategori 5KM pada World Stats Run 2019 di Dataran Merdeka hari ini. Larian ini disertai lebih daripada 7,000 peserta dan menyaksikan tiga peringkat larian dari 5KM, 10KM dan 21KM dengan acara flag off pertama bermula seawal 5.30 pagi. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

பிரதமரை பதவி விலக வேண்டுகோள் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினரை அஸ்மின் சாடினார்

கோலா லம்பூர் , ஆகஸ்ட் 18:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பதவி விலக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் அப்துல் கரீம் கருத்தை கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சாடினார் .

கெஅடிலான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் ஹாசான் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களை பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுவது சரியான முறையல்ல, மாறாக தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியில் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவம் ஏற்கனவே பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மீது நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தி உள்ளதை நினைவுபடுத்தினார்.

” டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியில் இருப்பதை கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்தனர். கடந்த ஓராண்டு காலத்தில் டாக்டர் மகாதீர் முகமட் அடிப்படை கொள்கைகளை வகுத்துள்ளார். தற்போது, இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று  அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :