NATIONALRENCANA PILIHAN

உயர்தொழில்நுட்ப முதலீட்டின் முக்கிய தேர்வாக திகழ மலேசியா இலக்கு

கோலாலம்பூர், ஆக.28-

தொழில்துறை புரட்சி 4.0 மூலம் உயரிய தொழில்நுட்பம் கொண்ட முதலீட்டு திட்டங்களின் முதன்மை தேர்வாக மலேசியா திகழும் என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஒங் கியான் மிங் நம்பிக்கை தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்திற்கு தீர்வு காணும் நாடாகவும் மலேசியா உருவாக வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதாக அவர் சொன்னார்.

“2025 ஆண்டிற்குள் அரசாங்கத்தின் திட்ட அமலாக்கம் வழி சிறந்த திறனாற்றல்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதோடு உள்நாட்டு மொத்த உற்பத்தி அதிகரிப்பிற்கும் இது முக்கிய பங்காற்ற முடியும்” என்றார் அவர்.

இது தவிர்த்து இந்நடவடிக்கை காரணமாக புத்தாக்க திறன் மேம்பாடு காண்பதோடு உயர்திறன் ஆற்றல் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :