Pembinaan Rumah Selangorku menjadi keutamaan Kerajaan Negeri bagi memastikan rakyat di negeri ini berpeluang memiliki kediaman sendiri. Foto REMY ARIFIN/SELANGORKINI
NATIONAL

வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு கழகத்தைத் தோற்றுவிப்பீர்!

கோலாலம்பூர், அக்டோபர் 31-

தேசிய வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு கழகத்தைத் தோற்றுவிக்குமாறு சொத்துடைமை மதிப்பீடு,நிர்வாக,முகவர் மற்றும் தனியார் சொத்துடைமை ஆலோடகர் சங்கம் (பெப்ஸ்) அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

நாடு முழுவதிலும் வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்புத் திட்டங்களை பரிந்துரைப்பதோடு கண்காணித்தல், நடவடிக்கை திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்புகளை அக்கழகம் ஏற்க வேண்டும்.
அனைத்துலக தரத்தின் அடிப்பையில் மலேசிய வீடுகள் வாங்கும் சக்திக்கேற்ற அளவில் இல்லை என்று பேங்க் நெகாரா கடந்த வாரம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நிலத்தின் விலை மற்றும் வீடமைப்பு கட்டுமானச் செலவினம் ஆகியவற்றை குறைப்பதன் மூலம் சக்திக்கேற்ற வீடமைப்புத் திட்ட பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்று பெப்ஸ் செயற்குழு அதிகாரி ஜேம்ஸ் வோங் கூறினார்.
குடும்ப வருவாயானது வீட்டின் விலையேற்றத்திற்கு இணையாக இல்லாததே வீடுகள் வாங்கும் சக்தி இல்லாததற்கு காரணம் என்றார் அவர்.


Pengarang :