Tapak pembuangan sampah haram di bawah jambatan di Jalan Jeti, Pelabuhan Klang yang dibersihkan KFoto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனம்: பாலத்திற்கு அடியில் 51 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன!

கிள்ளான், நவம்பர் 5:

ஜாலான் ஜெட்டி, தாமான் கேம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சட்டவிரோதமாக வீசப்பட்ட 51 மெட்ரிக் டன் எடை கொண்ட குப்பைகளை கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனம் சேகரித்து துப்புரவு செய்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிறுவனம் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது குடியிருப்பு கழிவுப் பொருட்கள், கட்டட நிர்மாணிப்பு கழிவு பொருட்கள் உட்பட பல்வேறு வகையான திடக்கழிவுகள் காணப்பட்டதாக அதன் பொது மற்றும் ஊடக தொடர்பு பிரிவு தலைவர் மாஹ்ஃபுஸா முகமது தார்மிடி கூறினார்.

பொறுப்பற்ற தரப்புகள், எம்பிகே ஏற்படுத்தியுள்ள குப்பை கூடங்களில் இக்கழிவு பொருட்களை வீசியிருக்க வேண்டும் என்றார் அவர்.
இப்பகுதி ஒரு சில மாதத்திற்கு முன்னர் சுத்தப்பட்டதாகவும் ஆனால் அடையாளம் தெரியாத பொறுப்பற்ற தரப்புகள் மீண்டும் இப்பகுதியை அசுத்தப்படுத்தியுள்ளன என்றும் அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட பாலத்தின் அடியில் துப்புரவு பணி மேற்கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :