RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் கையிருப்பு நிதி 4.93 % அதிகரிப்பு

ஷா ஆலம், நவம்பர் 5:

ஒன்றிணைக்கப்பட்ட குழும நிதியின் நடப்பு நிலை (செப்டம்பர் 30 வரை) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.93 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2018 ஆண்டு 2,135.57 மில்லியன் வெள்ளியாக இருந்த வேளையில் இவ்வாண்டு 2,240.66 மில்லியன் வெள்ளியாக அது உயர்ந்துள்ளது.
இந்த மொத்த நிதியில் 23.83 மில்லியன் வெள்ளி ரொக்கம் என்றும் 2,216.83 வெள்ளி முதலீட்டிற்கான நிதியாகும் என்றும் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

‘சிலாங்கூர் மாநிலத்தின் கையிருப்பு நிதி என்பது ஒன்று சேர்க்கப்பட்ட வசூல், ஒன்று சேர்க்கப்பட்ட அறங்காப்பக கணக்கு மற்றும் ஒன்று சேர்க்கப்பட்ட கடனுதவி கணக்கு ஆகியவற்றை உள்ளடக்கும்’ என்றார் அவர்.

‘2018ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் கையிருப்பு நிதியானது ஒன்று சேர்க்கப்பட்ட வசூல் கணக்கில் வெ.826.79 மில்லியன், ஒன்று சேர்க்கப்பட்ட அறங்காப்பக கணக்கில் வெ. 1,401.78 மில்லியன் மற்றும் ஒன்று சேர்க்கப்பட்ட கடனுதவி கணக்கில் வெ. 10.09 மில்லியன் ஆகியவற்றின் மொத்தத் தொகையான வெ. 2,240.66 மில்லியனாகும் என்றார் அவர்.


Pengarang :