NATIONAL

அன்வார் & சைபுடின் எஸ்பிஆர்எம் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்- ஸாக்காரியா

கோலா லம்பூர், டிசம்பர் 1:

மக்கள் நீதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜக்கரியா அப்துல் ஹமிட், தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்துயோன் ஆகியோர் தங்கள் செயலை நியாயப்படுத்த எம்ஏசிசி பின்னால் ஒளிந்துகொள்வதை நிறுத்த வேண்டும் என்று காட்டமாகக் கூறினார்.

“ அன்வார் என்னைக் கட்சியில் இருந்து  நீக்கம் செய்தது சட்ட விரோதமானது மட்டுமல்ல இது நியாயமற்றது. எனவே, அன்வாரும் சைபுடினும் கட்சித் தலைமைத்துவமும் தவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

“ தாங்கள் செய்த செயலுக்கு எம்ஏசிசி-யைக் காரணம் காட்டி அதன் பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக மறுமலர்ச்சி  சிந்தனைகளுக்கு ஏற்ப நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்”, என்று நேற்றிரவு ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு கட்சித் தேர்தலில் ஜக்கரியா வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட புலனாய்வு குறித்து எம்எசிசி அனுப்பிய கடிதத்தைப் பயன்படுத்தி பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றம் அவரைக் கட்சி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :