SELANGOR

2022க்குள் 4,800 ‘ரூமா இடாமான்’ வீடுகள் பூர்த்தியாகும்!

ஷா ஆலம், டிச.18-

இதுவரை மொத்தன் 4,800 ரூமா இடாமான் வீடுகளைக் கட்டுவதற்கு அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்றும் இவை 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமைப் பெற்றுவிடும் என நம்புவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
காஜாங், பாங்கி மற்றும் பாயா ஜாராஸ் ஆகிய பகுதிகளில் நிர்மாணிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக அவர் சொன்னார்.

“ஒவ்வொரு ரூமா இடமானும் மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு அவை ஓராயிரம் சதுரடியில் நிர்மாணிக்கப்படுவதாகவும் கார் நிறுத்திமிடத்தையும் கொண்டிருக்கும்” என்றார் அவர்.

இவ்விடுகளில் தொலைக்காட்சி காபினெட்டுகள், சமையல் அறை அலமாரி, குளிர் சாதனப் பெட்டி, குளிரூட்டி மற்றும் நீரை வெப்பமாக்கும் சாதனம் ஆகியவைப் பொருத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இத்தனை வசதிகளைக் கொண்ட இந்த வீட்டின் விலை வெறும் 250,000 ரிங்கிட் மட்டுமே என்று தனது கீச்சகத்தில் தெரிவித்தார்.


Pengarang :