ECONOMYNATIONAL

பொருளாதாரத்தை மேம்படுத்து அரசு அதிக செலவு செய்ய நேரிடும்! – பொருளாதாரர் நிபுணர் கருத்து

கோலாலம்பூர், பிப்.12-

உலகளாவிய நிலையற்ற பொருளாதாரச் சூழல் காரணமாக தனியார் துறை தங்கள் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தக் கூடும் என்பதால் அரசாங்கத்தின் செலவினத்தின் எந்தவொரு முயற்சியும் மலேசியாவிந் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவசியம் எனக் கருதப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“உலகளாவிய வர்த்தகப் போர், மேற்காசியாவில் விரிவாக்கம் கண்டு வரும் உயிரியல் அரசியல், தேவைக்கு அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் புதிதாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்றவை சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது இவ்வாண்டு ஜூன் மாதம் வரை தொடரக்கூடும்” என்று பேங்க் இஸ்லாம் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்ஜானிஸாம் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

பல்வேறு பொருட்கள் வழி உலகளாவிய பொருளாதாரத்தில் செல்வாக்கைப் பெற்றுள்ள சீனாவின் பொருளாதாரத்திற்கு வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத தாக்கமானது நாட்டின் உற்பத்தி நடவடிக்கையையும் வெகுவாகப் பாதித்துள்ளது என்றார் அவர்/
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்காக சீனாவைச் சார்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு நிச்சயம் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் விவரித்தார்.


Pengarang :