NATIONAL

தைப்பூச அமலாக்க நடவடிக்கை: 76 பேரை போலீஸ் கைது செய்தது!

ஷா ஆலம், பிப்.17-

தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை கோம்பாங் வட்டார காவல் துறை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 76 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோத வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தல், மிரட்டி மற்றும் குற்றவியல் செயல் போன்ற நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று இவ்வட்டார போலீஸ் படைத் தலைவர் துணை ஆணையர் அரிஃபாய் தாராவி இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

தைப்பூசத் திருவிழா அமைதியுடனும் முறையாகவும் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய செலாயாங் நகராண்மைக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்பு படை, சுகாதார இலாகா, செம்பிறை சங்கம், செயிண்ட் ஜோன் மற்றும் மலேசிய ரயில்வே நிறுவனம் ஆகிய அமைப்புகள் உதவி புரிந்தன என்றார் அவர்.
“இவ்வமைப்புகளின் ஒத்துழைப்பினால், 2020ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் எவ்வித அச்ம்பாவிதம் இன்றி நல்ல முறைடி நடைபெற்றது” என்று அவர் சொன்னார்.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பத்துமலையில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழாவிற்கு 1.8 மில்லியன் பேர் வருகைப் புரிந்தனர்.


Pengarang :