SELANGOR

எல்லா விவகாரங்களுக்கும் சிலாங்கூர் உடனடியாக தீர்வு காண வேண்டும் -மந்திரி பெசார்

ஷா ஆலாம், மார்ச் 1:

மக்கள் அனைவரும் தற்போது சமூக வலைத்தளம் வாயிலாக உலகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால் மாநில அரசாங்கம் விரைவான, துல்லிதமான மற்றும் கட்டுப்பாடான செய்திகளை வழங்குவது அவசியம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
எல்லா பிரிவினருக்கும் தனித்தனி நோக்கம் உண்டு. சிலர் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுவதோடு அதிகாரம் மற்றும் அரசாங்கத்தையும் சந்தேகிக்கின்றனர் என்றார் மந்திரி பெசார்.

“அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவு பல்வேறு கோணங்கள் மற்றும் நிலைகளைக் கொண்டது. உதாரணமாக, 1எம்டிபி போன்ற சில விவகாரங்கள் பல பின்னணிகளைக் கொண்ட மக்களைக் கவர்ந்துள்ளது” என்று அவர் மேலும் சொன்னார்.
“முன்பு அமலாக்க தரப்பு மற்றும் இயக்கவாதிகளை மட்டுமே கவர்ந்த இதுபோன்ற விவகாரம் இப்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது” என்று அண்மையில் இந்தோனேசியா, பண்டோங்கில் நடைபெற்ற சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
இதன் பொருட்டு, மாநில அரசாங்கம் ஒவ்வொரு விவகாரத்திற்கும் உடனடியாகவும் துல்லிதமான முறையிலும் தீர்வு காண்பது அவசியம் என்று அமிருடின் வலியுறுத்தினார்.


Pengarang :