KUALA LUMPUR, 13 Mei — Sampel yang diambil daripada individu kemudian akan dihantar bagi mendapatkan keputusan ujian saringan COVID-19 sebelum bermulanya persidangan Dewan Rakyat yang dijadualkan bermula pada 18 Mei ini di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூர், மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது

ஷா ஆலம், மே 22:

சிலாங்கூர் மாநிலம் இன்று மீண்டும் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களை அதிகமாக பதிவு செய்துள்ளது. சிலாங்கூரில் நண்பகல் 12 வரை 45 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு  பணிக்குழு (எஸ்திஎப்சி) தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. உலு லங்காட் மாவட்டம் 36 புதிய சம்பவங்களும், காஜாங் (6), செராஸ் (2) மற்றும் செமினி (1) இன்று கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அது மேலும் தெரிவித்தது.

” சிலாங்கூர் மாநிலம் மூன்று நாட்கள் மட்டுமே சிவப்பு மண்டலமற்ற பகுதியாக இருந்தது. உலு லங்காட் மறுபடியும் சிவப்பு மண்டலமாக உள்ளது. நோன்பு பெருநாள் காலத்தில் மாநிலம் தாண்டி செல்லாதீர்கள். மேலும், நமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட உள்ளது,” என்று தமது அறிக்கையில் அது கூறியுள்ளது.


Pengarang :