SELANGOR

கூடிய விரைவில் கோழி இறைச்சி விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் !!!

ஷா ஆலம், ஜூலை 4:

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கோழி இறைச்சி பற்றாக்குறையினால் விலையேற்றம் கண்ட நிலையில் மீண்டும் அதன் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நல அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஸிக்ரில் அஸான் அப்துல்லா கூறினார். கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் கொடுத்த விவரங்களின் மூலம் கோழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் இந்த நடவடிக்கை விலையை கட்டுப்படுத்தும் என மேலும் தெரிவித்தார்.

” நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் கோழி இறைச்சி உற்பத்தி குறைந்த காரணத்தால் இதன் விலையேற்றம் ஏற்பட்டது. கோழிப் பண்ணையில் சுமார் 60 சதவீதம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. கோழிச் சந்தையில் ஏற்பட்ட சுணக்கம் உற்பத்தியாளர்களுக்கு நிலையற்ற தன்மையை உண்டாக்கியது,”  என்று தமது அறிக்கையில் அவர் கூறினார்.


Pengarang :