SELANGOR

‘சிலாங்கூர் கேர்ஸ்’ குழுவினர் மேலும் 2000 குடும்பங்களுக்கு உதவ இலக்கு !!!

ஷா ஆலம், ஜூலை 8:

கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ‘சிலாங்கூர் கேர்ஸ்’ குழுவினர் மேலும் 2,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தேசித்துள்ளனர் என அதன் அதிகாரி அமாட் பாக்ரின் சோஃபாவி அபு பாக்கார் தெரிவித்தார். இது வரையில் 3,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்துள்ளனர். இதன் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியாரின் ஒத்துழைப்போடு உதவிகள் வழங்கப்பட்டது என்றார் அவர்.

” ‘சிலாங்கூர் கேர்ஸ்’ குழுவினர் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருகின்றனர். மேலும், ஆகஸ்ட் வரையில் நடமாடும் கட்டுப்பாடு ஆணையினால் (பிகேபி)  பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவோம்,” என சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

சிலாங்கூர் கேர்ஸ் குழுவினருக்கு ஆதரவு அளிக்க எண்ணம் கொண்டவர்கள் 03-79320711 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அமாட் பாக்ரின் கூறினார்.


Pengarang :