ஷா ஆலம், ஜூலை 26:
மக்களுக்கு முன்கூட்டியே பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கங்கள் கொடுத்தால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி எதிர் வரும் பொதுத் தேர்தலில் அதிகமான இடங்களை வெற்றி பெற முடியும் என்று மக்கள் நீதிக் கட்சியின் தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ சம்சுல் இஸ்கண்டர் முகமட் அகின் தெரிவித்தார். 22 மாதங்களாக புத்ராஜெயா நிர்வாகத்தை வழிநடத்தி வந்தாலும் மக்களுக்கு முழுமையான விளக்கங்களை கொடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான சம்சுல் இஸ்கண்டர் தெரிவித்தார்.
” நாம் இன்றே மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தால், அம்பாங் மற்றும் கோம்பாக் மட்டுமின்றி திடீர் பொதுத் தேர்தலிலும் எதிர் கொள்ள முடியும்,” என்று அம்பாங் டி பால்மா இன் தங்கும் விடுதியில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார். பாக்காத்தான் ஆட்சி செய்யும் போது, நாம் அலட்சியமாக இருந்ததால் மக்களுக்கு சரியான முறையில் தகவல்களை கொடுக்க முடியவில்லை என்று கூறினார்.