ECONOMYPBTSELANGOR

நாடி திட்டத்தின் வாயிலாக சிறு வியாபாரிகளுக்கு உதவி

ஷா ஆலம், 1– சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள் வர்த்தகத் துறையில் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக சிலாங்கூர் அரசு நியாகா டாருள் ஏசான் (நாடி) எனும் திட்டத்தை அடுத்தாண்டில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

இந்த நாடி திட்டத்தின் கீழ் வணிகர்கள் எஸ்.எஸ்.எம். எனப்படும் வர்த்தக அனுமதி சான்றிதழ் இன்றி ஊராட்சி மன்றங்களிடமிருந்து வியாபார லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வியாபாரம் செய்வதற்கு நிரந்தர இடம் இல்லாத நிலையிலும் அவர்கள் ஆயிரம் வெள்ளி முதல மூவாயிரம் வெள்ளி வரை கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், வியாபாரத்தை தொடக்கிய ஆறு மாத காலத்திற்கு பிறகு அவர்கள் எஸ்.எஸ்.எம். எனப்படும் வர்த்தக அனுமதியை பெற்றாக வேண்டும். வர்த்தக அனுமதியைப் பெற இயலாத பட்சத்தில் அவர்களின் ஊராட்சி மன்ற லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :