ECONOMYPBTSELANGOR

எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலை வாய்ப்பு சந்தை சிறிய அளவில் நடத்தப்படும்

ஷா ஆலம், நவ 22- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப 2020 ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்பு சந்தையை சிறிய அளவில் நடத்த மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மன்றமும் சிலாங்கூர் கோவிட்-19 பணிக் குழுவும்  நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நேர்முக மற்றும் இயங்கலை வாயிலான நேர்காணல்கள் நடத்தப்படும் என்று மனித வள மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க 9,696 பேர் பதிந்து கொண்டுள்ளதை ஜோப் மலேசியா அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் மேலும் சொன்னார். தாமான் கோம்பாக் மற்றும் சவுஜானா உத்தாமாவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையில் 37 நிறுவனங்கள் பங்கு கொண்டு 6,567 வேலை வாய்ப்புகளை வழங்கியாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :