ECONOMYSELANGORYB ACTIVITIES

சுங்கை சாலாக்கில் பாலம் நிர்மாணிக்க வெ. 10 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி புசார் அறிவிப்பு

கோம்பாக், நவ 28- இங்குள்ள கம்போங் சாலாக் பத்து 10 பகுதியில் பாலம் நிர்மாணிக்க மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த பால நிர்மாணிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பால இணைப்பு இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக எதிர் நோக்கி வந்த இன்னல்கள் இதன்வழி முடிவுக்கு வரும் என்று அவர் சொன்னார்.

இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், அப்பகுதியில் வசிக்கும் சுமார் மூவாயிரம் இதன் மூலம் பலனடைவர் என்றார்.

ஏறக்குறைய 48 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் பயணிக்க முடியும். இந்த வட்டாரத்தில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் இயலும் என்றார் அவர்.


Pengarang :