ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் வளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க விரைவு பணிப்படை உருவாக்கம்

ஷா ஆலம், டிச, 3- சிலாங்கூரில் நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் நிகழ்வதை 
தடுப்பதற்காக விரைவு பணிப்படையை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் அமைத்துள்ளது.

இந்த பணிப்படை நேற்று முன்தினம் செயல்படத் தொடங்கியது. அந்த பணிப் படையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம், சுற்றுச்சூழல் துறை, தேசிய நீர் சேவை ஆணையம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளதாக லுவாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மேலும், ஊராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், நில மற்றும் மாவட்ட அதிகாரிகள் 
மற்றும் இதர அரசு துறைகளின் உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளதாக அது மேலும் கூறியது.

பிரச்சனைக்குரிய இடங்களாக கருதப்படும் சுங்கை சிலாங்கூர்,சுங்கை கிள்ளான் 
மற்றும் சுங்கை செமினி ஆற்றோரங்களில் இந்த கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்
 படும். இதன் மூலம் ஆறுகளில் தூய்மைக்கேடு ஏற்படுவதை தடுக்க முடியும் 
என்பதோடு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பணிகள் நிறுத்தப்படும் சம்பவங்களை குறைக்கவும் முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நீர் வளங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த 
கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படுகிறது. சிலாங்கூர் மாநில நீர் வள மாசுபாடு தடுப்பு அவசர பணிக் குழுவின் செயலகமாகவும் இந்த விரைவு பணிப்படை விளங்கும்.

Pengarang :