八打灵再也市长拿督沙尤迪(左二)为“八打灵再也市政厅数码建筑物委员会”(eCOB)网站主持推介。
ECONOMYPBTSELANGOR

அடுக்கு மாடி,  எப்பாட்மண்ட்ஸ் குடியிருப்பு சிக்கல்களைத் தீர்க்க  நகராட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஷா ஆலம், டிச 24: அடுக்கு மாடி, மற்றும்  எப்பாட்மண்ட்ஸ் போன்ற குடியிருப்புகளில் வாழ்பவர்கள்  நலனுக்கு , அமைக்கப்படும் கூட்டு நிர்வாகக் குழுவின் (ஜே.எம்.பி) கீழ் எழும் சிக்கல்களைத் தீர்க்க  நகராட்சி மற்றும் மாநகர் மன்ற  அதிகாரிகள் (பிபிடி) கட்டிட ஆணையர்களுக்கு (சிஓபி) முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒழுங்காக நிர்வகிக்க முடியாததால் எழும் பல்வேறு சிக்கல்களைத்  தீர்க்கச்  சீஓபி எனப்படும் கட்டட மேம்பாட்டு நிறுவனத்தின்  ஈடுபாடு தேவை என்று வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில்  கூறினார்.

இது போன்ற விஷயங்களில் தீர்வு காணச் சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம் (LPHS) நகராட்சி மற்றும் மாநகர் மன்றங்களுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேற்படி விவகாரங்களில் தீர்வை தேட வேண்டிய பல பிரிவினர் , ஒருவரை ஒருவர்  குற்றம் சாட்டுவதைக் குறியாகக் கொண்டுள்ளனர்.  அதனால், சிறந்த தீர்வை தேட  எதிர்வரும் ஆண்டில்  அவரின் பிரதான நிகழ்ச்சி நிரலாகத் தான்  இதனை  எடுத்துக்கொள்ள விருப்பதாக, அவரின்  வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு கூட்டத்தை முடித்து வைத்துப் பேசும் பொழுது அவர் கூறினார்.

இதற்கிடையில்,சில அடுக்கு மாடி மற்றும் எப்பாட்மண்ட்ஸ் வீடுகள்  ஹோட்டல் அறைகளாகவும் மற்றும் ஹோட்டல் காண்டோமினியங்களாக  (காண்டோஸ்)  செயல் படும் விவகாரங்களையும் தாங்கள் எதிர்நோக்கியுள்ளதாகக்  கூறினார்.

இப்பொழுது தொலைதொடர்பு மூலம்  சில  வீடுகளைத்  தின வாடகைக்கு விடும் கலாச்சாரமும் பெருகி வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விஷயங்களில் இதுவும்  ஒன்றாகும்,

“எனவே, இது போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு புதிய கொள்கையை உருவாக்குவதன் மூலம் ஒரு தீர்வு இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று அவர் கூறினார்


Pengarang :