ECONOMYNATIONALSELANGORTOURISM

சுற்றுலா துறையினருக்கு சிறப்பு உதவித் திட்டம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஜன,5- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிப்பை எதிர்நோக்கி- யுள்ள சுற்றுலா துறையினருக்கு  உதவும் வகையில் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தை அமல் படுத்தும் சாத்தியத்தை பரிசீலிக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் சுற்றுலா துறை எதிர் நோக்கி வரும் மந்த நிலை 
காரணமாக சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள்,சுற்றுலா முகவர்கள் மற்றும் தங்கும் விடுதி நடத்துனர்கள் வேறு வேலைகளை தேடிச் செல்லத் தொடங்கி விட்டதாக சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

நிதி நிலைமை அனுமதித்தால் சுற்றுலாத் துறையினருக்கு இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தை அமல் படுத்தும் சாத்தியம் குறித்து பரிசீலிக்கவிருக்கிறோம். இந்த உதவி 
அதிகமாக இல்லாவிட்டாலும் அவர்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்க உதவும் 
என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறை சார்ந்த 553 பேருக்கு மாநில அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 
தலா ஆயிரம் வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியது.

மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தபொருளாதார மீட்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவித் தொகை வழங்கப்
பட்டது.

அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக ஆக்கப்பூர்வமான மற்றும் 
கவர்ச்சிகரமான சுற்றுலா திட்டங்களை அமல்படுத்தப்படுத்தும்படி சுற்றுலா 
துறையினரை லோய் சியான் கேட்டுக் கொண்டார்.

Pengarang :