ECONOMYEVENTSELANGOR

கோவிட்-19 இலவச பரிசோதனை வாய்ப்பை சிறு தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஷா ஆலம், பிப் 20- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனையை சிறிய தொழிற்சாலைகள் அரிய வாய்ப்பாக பயன்படுத்தி தங்கள் தொழிலாளர்களை இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்து.

இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக தங்கள் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்வதற்கு உண்டாகும் செலவினை முதலாளிகள் மிச்சப்படுத்த முடியும் என்று அசாம் மெர்டு நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவு நிர்வாகி ஷா லெஹான் மாட்ஜின் கூறினார்.

நிச்சயமற்ற நடப்பு பொருளாதாரச் சூழல் காரணமாக தனது தொழிலாளர்களை தாம் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனைக்கு அழைத்து வந்ததாக அவர் சொன்னார்.

தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 பரிசோதனைக்கு விதிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளதால் தங்களைப் போன்ற சிறிய தொழிற்சாலை நடத்துநர்களுக்கு இந்த இலவச கோவிட்-19 திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற சோதனைகளை நாங்கள் மேற்கொள்ளாது போனால் எங்கள் தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று உள்ளதா? இல்லையா? என்பது தெரியாது போய்விடும். இத்திட்டம் உண்மையில் எங்களைப் போன்ற சிறு தொழில்முனைவோருக்கு பெரும் பயனைத் தந்துள்ளது என்றார் அவர்.

பண்டமாரான் ஜெயா, பல்நோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதே கருத்தினை எப்.பி.பிளேட்டிங் நிறுவனத்தித்ன மேலாளர்  தை வேய் லுனும் சிலாங்கூர் கினியிடம் பகிர்ந்து கொண்டார். தாம் 12 தொழிலாளர்களை இந்த இலவச பரிசோதனைக்கு அழைத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :