ECONOMYNATIONALPBTSELANGOR

வார இறுதியில் கோல லங்காட், கோல சிலாங்கூரில் இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மார்ச் 18– வார இறுதியில் கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூரில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோல லங்காட் மாவட்டத்தின் தெலுக் பங்ளிமா காராங் சமூக மண்டபத்தில் வரும் 20ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும்.

மார்ச் 21ஆம் தேதி கோல சிலாங்கூர், டேவான் பெஸ்தாரி ஜெயாவில் காலை 9.00 தொடங்கி மாலை 4.00 மணி வரை இந்த இயக்கம் நடத்தப்படும்.

கோல சிலாங்கூரில் தாமான் ஸ்ரீ இண்டா, தாமான் பெலாங்கி, தாமான் பஞ்சாரான், பெக்கான் பெஸ்தாரி ஜெயா, தாமான் கிலாவான் ஆகிய பகுதிகளில் வசிப்போர்  இத்திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய செலங்கா செயலி அல்லது http://screening.selangkah.my. எனும் அகப்பக்கம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநிலம் முழுவதும் இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள சிலாங்கூர் மாநில அரசு கித்தா சிலாங்கூர்  திட்டத்தின் வாயிலாக 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் ஜன நெருக்கடி மிகுந்த பகுதிகளில் வசிப்போரை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு இறுதிக்குள் ஐம்பதாயிரம் பேருக்கு இலவச  பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Pengarang :