ECONOMYNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளது- போலீஸ் துறை தகவல்

ஷா ஆலம், ஏப் 13-  உலகை உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்று  நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தலை மறைமுகமாக குறைத்துள்ளதாக புக்கிட் அமான் பங்கரவாத தடுப்பு பிரிவின் (டி8) துணைத் தலைமை இயக்குநர் துணை ஆணையர் நோர்மா இஷாக் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லைக்குட்பட்ட அளவிலும் அதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படையின் தொடர்ச்சியான தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் வழி கடந்தாண்டு முதல் பயங்கரவாத அச்சுறுதல்கள்  கணிசமான அளவு குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டில் ஏற்பட்ட கோவிட்-19  பெருந்தொற்று காவல் துறைக்கு தீமையிலும் நன்மையைக் கொண்டு வந்துள்ளது. நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சாத்தியத்தை போலீசார்   அடையாளம் காண்பதற்கு இது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் அவர் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

பெர்னாமா டிவி ஏற்பாட்டில் நடைபெற்ற விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.

இந்த பெருந்தொற்று நாட்டு மக்களை சொகுசான வாழ்க்கையிலிருந்து போராட்ட வாழ்க்கைக்கு மாற்றுவதில் மறைமுகமாக பங்காற்றியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனி பிரச்னைகளை இந்த நோய்த் தொற்று ஏற்படுத்தி விட்டது. வேலை இழப்பு, கடன் தொல்லை,  வீட்டு வாடகை கட்ட முடியாத நிலை, உணவைக் கூட வாங்க முடியாத சூழல் என  பல்வேறு இன்னல்களால் தத்தளிக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டது என்றார் அவர்.

வாழ்க்கையே சிக்கலாகிவிட்ட நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் உணர்வு மலேசியர்களிடையே மங்கிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :