ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுயகாலில் நிற்கும் தொழில் முனைவோரை உருவாக்குவதில் மாநில அரசு தீவிரம்

கோம்பாக், ஏப் 16- பொருளாதார மந்த நிலை உள்பட அனைத்து விதமான இடர்பாடுகளையும் சமாளிக்கும் வல்லமை கொண்ட சிறு மற்றும் நடுத்தர  தொழில் முனைவோரை உருவாக்கும் இலக்கை நோக்கி சிலாங்கூர் சரியான தடத்தில் பயணிக்கிறது.

நாட்டிற்கு குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்திற்கு வலுவான பொருளாதார அடித்தளமாக விளங்கும் ஹிஜிரா சிலாங்கூர் வாயிலாக இத்தகைய சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உருவாக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நிதி நெருக்கடி மற்றும் சார்ஸ் நோயின்  தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட தென் கொரியாவைப் போல் அரசாங்கத்தின் ஊன்றுகோல் தேவைப்படாத தொழில் முனைவோரை நாம் உருவாக்க விரும்புகிறோம்.

உலக பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலை எதிர்நோக்கியுள்ள நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரிதும் துணை புரியும் என அவர் குறிப்பிட்டார்.

முந்தைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய பொருளாதாரத்தை மக்கள் மயமாக்கும் திட்டம் இனியும் பொருத்தமானதாக இருக்காது எனக் கூறிய அவர், அதற்கு பதிலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் திட்டங்கள் அமல்படும் என்றார்.

உதவி பெற உண்மையில் தகுதி உள்ளவர்களாக என்பதை ஆராயாமல் அனைவருக்கும் உதவி வழங்கி வந்தோம். இதன் காரணமாக தகுதி இல்லாதவர்களும் பயன்பெற்றனர். ஆகவே, இப்போது வர்த்தகத்தை விரிவாக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே உதவி வழங்கவிருக்கிறோம் என்றார் அவர்.

.


Pengarang :