ECONOMYPBTSELANGOR

முறைப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தை சிலாங்கூர் அரசு வரைந்து வருகிறது

கோல சிலாங்கூர், ஏப் 24– எதிர் காலத்தில் வட்டார மேம்பாட்டிற்கான வழிகாட்டியாக விளங்கும் வகையில் முறைப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தை சிலாங்கூர் அரசு வரைந்து வருகிறது.

சீரான அந்த திட்டமிடலின்  வாயிலாக வீடமைப்பு, விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கான மண்டலங்களை நிர்ணயிக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூரில் விருப்பம் போல் மேம்பாட்டுத் திட்டங்கள்  மேற்கொள்ளப்படுவதைக் காண மாநில அரசு விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

முறைப்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு நீடித்த மேம்பாட்டை உறுதி செய்ய இயலும். இதன் மூலம் அனைவரும் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பும் ஏற்படும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள கம்போங் பாரு  பாசீர் பெனாம்பாங்கில் 13 ஏழை குடும்பங்களுக்கு புதிய வீடுகளுக்கான சாவியை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :