ECONOMYPBTSELANGOR

பிளாசா ஸ்ரீமூடாவில் ஷா அதிரடி சோதனை- 34  அந்நிய நாட்டினர் கைது

ஷா ஆலம், ஏப் 26– முறையான ஆவணங்களைக் கொண்டிராத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிரான அதிரடிச் சோதனை நடவடிக்கையை ஷா ஆலம் மாநகர் மன்றம் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று மேற்கொண்டது.

இங்குள்ள பிளாசா ஸ்ரீ மூடாவை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட அச் சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை உள்பட பல்வேறு அரசு நிறுவனங்களைச்  சேர்ந்த 87 அமலாக்க அதிகாரிகள் பங்கு கொண்டனர்.

இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் முறையான வேலை அனுமதியைக் கொண்டிராத 34 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நடவடிக்கையில்  வர்த்தக லைசென்சில் குறிப்பிடப்பட்டுள்ள வியாபாரத்திற்கு பதிலாக வேறு வியாபாரத்தில் ஈடுபட்டதற்காக எழு கடைகளின் லைசென்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியது.

சில கடைகளில் காய்கறிகள் விற்பதற்கு லைசென்சில் அனுமதி வழங்கிய நிலையில் மளிகைப் பொருள்கள் அங்கு விற்கப்பட்டது இச்சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அனைத்து வியாபாரிகளும்  விதிமுறைகளைப் பின்பற்றி வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக இது போன்ற சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாநகர் மன்றம் கூறியது.


Pengarang :