r
ECONOMYNATIONAL

கடுமையாகும் கோவிட்-19 நோய்த் தொற்று- எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பின்பற்ற  நோர் ஹிஷாம் வலியுறுத்து 

கோலாலம்பூர், மே 1- கோவிட்-19 நோய்ப்பரவல் நாட்டில் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

அனைவரும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்ட நெரிசல்  மற்றும் நெருக்கடி மிகுந்த இடங்களை தவிர்ப்பது மற்றும்  நெருக்கத்தில் நின்று உரையாடுவது போன்ற நடவடிக்கைகளை  பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிவது, கைகுலுக்குவதை தவிர்ப்பது மற்றும் நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை பெறுவது ஆகிய நடைமுறைகளும் கடைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இன்று புதிதாக 2,881 கோவிட்- 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மற்றொரு டிவிட்டர்  பதிவில் நோர் ஹிஷாம் கூறியுள்ளார்.  நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,788 ஆக இருந்தது.


Pengarang :