NATIONAL

மெலோர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

கோலாலம்பூர், மே 4- கிளந்தான் மாநிலத்தின் மெலோர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமது யுஸ்னான் யூசுப் மறைவைத் தொடர்ந்து நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த அத்தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாட்சிமை தங்கிய பேரரசர் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி நாட்டில் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தியுள்ள காரணத்தால் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மாருள்டின் இஷாக் கூறினார்.

மெலோர் தொகுதி எதிர் பாராத வகையில் காலியானது தொடர்பான அதிகாரப்பூர்வ
அறிவிப்பை மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து தாங்கள் நேற்று பெற்றதாக 
அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தொகுதி காலியான 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று   கிளந்தான் மாநில அமைப்புச் சட்டத்தின் 46(5) வது பிரிவு கூறுகிறது.

டாக்டர் யுஸ்னான் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி காலமானதை தொடந்து அத்தொகுதி காலியானது.

Pengarang :