KUALA LUMPUR, 14
ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரில் 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை- 6ஆம் தேதி அமல்

ஷா ஆலம், மே 5– சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில்  இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி 17ஆம்  தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுகிறது.  எஞ்சிய 3 மாவட்டங்களில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பெட்டாலிங், கோம்பாக், உலு லங்காட், கோல லங்காட், கிள்ளான், சிப்பாங் ஆகியவையே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களாகும். 

சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

ஆபத்து அவசர வேளை, இறப்பு மற்றும் வேலை காரணங்கள் தவிர்த்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரமலான் சந்தைகள் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுடன் அனுமதிக்கப்படும். எனினும், ரமலான் சந்தைகளை மூடுவதா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசின் வசம் உள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் திடீர் அதிகரிப்பைக் கண்டதாக அவர மேலும் கூறினார்.


Pengarang :