பொது முடக்க பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை வழக்கம் போல் மேற்கொள்ள அனுமதி

கோலாலம்பூர், மே 6– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்பட்டுள்ள சிலாங்கூர்  மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உற்பத்தித் துறை உள்பட அனைத்து பொருளாதார நடவடிக்கைளையும் வழக்கம் போல் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், எம்.சி.ஒ. 3.0 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் (எஸ்.ஒ.பி.) கீழ் எதிர்மறை பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சில  நடவடிக்கைகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது.

நடப்பு எஸ்.ஒ.பி. நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு எம்.சி.ஒ. 3.0 எஸ்.ஒ.பி. அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் முன்பு போல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த இம்முறை அனுமதி வழங்கப்படாது என்று  அனைத்துலக வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியது.

நிறுவனங்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அதாவது 30 விழுக்காட்டினர் மட்டுமே அலுவலகத்தில் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

பொது முடக்க காலத்தில் பின்பற்ற வேண்டிய எஸ்.ஒ.பி. விதிமுறைகள் தொடர்பான விபரங்களை தேசிய பாதுகாப்பு மன்ற அகப்பக்கம் வாயிலாக பெறலாம் என்று  அது தெரிவித்தது.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்படிடி  தொழில் துறையினரை அமைச்சு கேட்டுக் கொண்டது.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட சில காலத்திற்கு அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதும் அதில் அடங்கும் எனவும் அமைச்சு எச்சரித்தது.


Pengarang :