ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் இலவச கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள்.

ஷா ஆலம்; மே 21;- கடந்த ஓர் ஆண்டாக நாட்டையும் மக்களையும் ஆட்டிப்படைக்கும் மாபெரும் அழிவு சக்தியான கோவிட் 19 நோய்த்தொற்று அதிதீவிரம் அடைந்துள்ளது.

நாட்டில் இந்நோய்த்தொற்றின் காரணமாக தினசரி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பொழுது இளைஞர்களையும் காவு வாங்கும் இக்கொடிய தொற்றிலிருந்து விடுப்பட மலேசியர்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக சிலாங்கூர் மக்கள் அதிக விழிப்புடன் இருப்பது அவசியம். நாட்டின் நோய்த்தொற்றின் பெரும்பகுதி இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்பதாலும், அதிக நெரிசலில் வாழும் சூழ்நிலை இங்கு தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், நம்மை சுற்றியிருப்பவர்கள் உடல் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் கொரோனா வைரஸை ஏந்தி செல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் சிலாங்கூர் மாநில அரசு செயல் பட்டுவருகிறது.

ஏழை மக்கள் தனியார்  மருந்தகங்களில் அடிக்கடி உயர்ந்த மருத்துவக் கட்டணம் செலுத்தி நோய்த் தொற்று சோதனை செய்துக்கொள்வது இயலாத காரியம்.

இந்தக் கொள்ளை நோய் பீடிப்பை அறிந்திடாத நோயாளி இலகுவில் அவரின் குடும்பத்தையோ இக்கொள்ளை நோயிக்கு பலியிட வேண்டிய அபாயத்தில் உள்ளார் என்பதை உணர்ந்து, மாநில அரசின் ஏற்பட்டில் செல்கேர் அமைப்பு மக்களுக்கு இலவசமாக நோய் பரிசோதனைகளை மாநிலம் முழுவதிலும் மேற்கொண்டு வருகிறது.

ஆக, அனைவரும் குறிப்பாக ஏழைகள் அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில், வாக்களிக்கும் சட்டமன்றத் தொகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00மணி வரை நடத்தப்படும் நோய் பரிசோதனையில் பங்குகொள்ள முந்த வேண்டும்.

இட நெருக்கடியையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கச் செலங்கா செயலி வாயிலாகவும் http://screening.selangkah.my எனும் அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.  நமக்கு நாமே உதவிக்கொள்ளும் வகையில் உங்கள் பகுதியில் நடக்கும் இலவச நோய் பரிசோதனை முகாம் குறித்த தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Pengarang :