P
ECONOMYPBTSELANGOR

பொது முடக்க காலத்தில் சிறு வணிகர்களுக்கு பிளாட்ஸ் 2.0 திட்டத்தின் வழி உதவி

ஷா ஆலம், ஜூன் 3- சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்வதில் பிளாட்பார்ம் சிலாங்கூர் எனப்படும் (பிளாட்ஸ்) 2.0 திட்டம் தொடர்ந்து உதவும்.

எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் மாநில பொருளாராத்திற்கு உந்து சக்தியாக விளங்கும்.

சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனங்களான பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் மற்றும் யாயாசன் ஹிஜிரா சிலாங்கூர் மற்றும் தனியார் நிறுவனமான கிராப் எக்ஸ்பிரஸ் ஆகியற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது.

சிறு வியாபாரிகள் இலக்கவியல் தொடர்பான அடிப்படை பயிற்சிகளைப் பெறுவதற்கும் நிதியுதவி மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகளை பெறுவதற்கும் இந்த பிளாட்ஸ் 2.0 திட்டம் துணை புரிகிறது.

இந்த பிளாட்ஸ் 2.0 திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர்  எனும் அகப்பக்கம் www.platselangor.com வாயிலாக தங்களின் வர்த்தகம் தொடர்பான விபரங்களை தெரிவிக்கலாம்.

தங்கள் கடையின் புகைப்படத்தையும்  வியாபாரம் பற்றிய குறிப்புகளையும் அந்த அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யும் பட்சத்தில் பிளாட்ஸ் 2.0 தரப்பு அதனை பரிசீலனை செய்து உரிய உதவிகளை வழங்கும்.


Pengarang :