ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19:  இரு வாரத்தில் 1,379 சம்பவங்கள் குறைந்தன- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம்

ஷா ஆலம், ஜூன் 9- கடந்த மே மாதம் 23ஆம் தேதி முதல் இம்மாதம் 5ஆம் தேதி வரையிலான இரு வார காலத்தில் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் 2.6 விழுக்காடு அதாவது 1,379 சம்பவங்கள் குறைந்துள்ளன.

கடந்த மாதம் 12ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இந்த நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எனினும், 20 மற்றும் 21வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் தீவிர தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு கண்டதாக அவர் சொன்னார்.

கடந்த 20 வது நோய்த் தொற்று வாரத்தில் 57,022 ஆக இருந்த அதிக தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 22 வது நோய்த் தொற்று வாரத்தில் 37 விழுக்காடு உயர்ந்து 78,017ஆக ஆனதாக அவர் தெரிவித்தார்.

அந்நோய்த் தொற்று காரணமாக இன்னும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 82,797 ஆக பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :