ECONOMYHEALTHSELANGOR

ஹிஜ்ரா கடனை திரும்பச் செலுத்துவதை ஒன்றரை மாதங்களுக்கு ஒத்தி வைக்க அனுமதி

ஹிஜ்ரா கடனை திரும்பச் செலுத்துவதை ஒன்றரை மாதங்களுக்கு ஒத்தி வைக்க அனுமதி

 

ஷா ஆலம், ஜூன் 10- கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒன்றரை மாதங்களுக்கு ஒத்தி வைப்பதற்கான அனுமதியை ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் வழங்கியுள்ளது. இந்த சலுகையின் வழி அந்த வாரியத்தில் கடன் பெற்ற சுமார் 40,000 தொழில்முனைவோர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டு மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடனை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கப்பதற்கான அனுமதியை வழங்கும் இந்நடவடிக்கை 1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கியிருக்கும் என்று என்று அவர் சொன்னார்.

 


Pengarang :