ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூரில் 10 இடங்களில்  காய்கறிகள் மலிவான விலையில் விற்பனை

சிலாங்கூரில் 10 இடங்களில்  காய்கறிகள் மலிவான விலையில் விற்பனை

 

ஷா ஆலம், ஜூன் 15- சந்தையில் அதிகப்படியாக இருக்கும் காய்கறிகள் சிலாங்கூர் விவசாய பரிவுத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பத்து இடங்களில் மலிவான விலையில் விற்கப்படும்.

ஷா ஆலம், செக்சன் 14இல் உள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்., செக்சன் 7, விஸ்மா சிடா,  செக்சன் 13, ஹோலிஸ்மைக் கேபே,  தாமான் மேரு ஜெயா, ரவாங், சிலாங்கூர் புரூட் வேலி ஆகிய இடங்களில் அந்த விவசாயப் பொருள்கள் விற்கப்படவுள்ளன.

இது தவிர அக்ரோசெல் எனப்படும் சிலாங்கூர் வேளாண் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ்  பாங்கி, கோத்தா ராஜா, பண்டான் இண்டா மற்றும் பூச்சோங், டிங்கிலில் உள்ள ஃபாமா விவசாய பொருள் விற்பனை மையங்களிலும் இந்த விற்பனை திட்டம் மேற்கொள்ளப்படும்.

இந்த சந்தைகளில் வாழை, மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகள் விற்கப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

அதிகப்படியான உற்பத்தி காரணமாக சந்தையில் விற்க முடியாத நிலையிலிருக்கும் காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி 50 விழுக்காட்டு விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக மாநில அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கடந்த வாரம் கூறியிருந்தார்.


Pengarang :