ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஏழை மாணவர்களுக்கு  பயன்படுத்தப்பட்ட கணினிகளை தந்து உதவுவீர்- பந்திங் மக்களுக்கு கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 29- ஏழை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகளை தந்து உதவுமாறு பந்திங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

“ஒரு கணினி ஒரு நம்பிக்கை“ எனும் இயக்கத்தின் வாயிலாக பயன்படுத்தப்பட்ட கணினிகளை சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொகுதி உறுப்பினர் லாவ் வேங் சான் கூறினார்.

கணினி இல்லாத காரணத்தால் வீட்டிலிருந்து கல்வி கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் இயங்கலை வாயிலாக கல்வி கற்பது  தற்போது புதிய இயல்பாகி விட்டது. வசதி குறைந்தவர்கள் குறிப்பாக பூர்வக் குடியினர் இந்த இந்த புதிய இயல்புக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வது சிரமமான ஒன்றாக உள்ளது என்றார் அவர்.

ஆகவே, செயல்படும் நிலையில் உள்ள மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகளை வைத்திருப்போர் அவற்றை கொடுத்து உதவும் பட்சத்தில் வசதி குறைந்த மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று அவர் சொன்னார்.

இந்த இயக்கத்தின் வாயிலாக இதுவரை 12 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கணினிகளை அன்பளிப்பாக வழங்க விரும்வோர் பந்திங்கில் உள்ள தொகுதி சேவை மையத்தை அல்லது 016-3221563 என்ற எண்களில் சட்டமன்ற உறுப்பினர் வேங் சானை தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :