HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19: மரண எண்ணிக்கை  நேற்று 84 ஆக உயர்வு

ஷா ஆலம், ஜூலை 2– கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 84 உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 62 ஆக இருந்தது.

மரணமடைந்தவர்களில் 50 பேர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டிருந்ததாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நேற்று மரணமடைந்தவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர் 30 வயது பெண் என்றும் அவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது தவிர, உடல் பருமன் பிரச்னையைக் கொண்ட 30 மற்றும் 40 வயதுடைய ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானதாகவும் அவர் சொன்னர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 46 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியான வேளையில் கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் தலா 6 சம்பவங்களும் சபாவில் 5 சம்பவங்களும் பதிவானதாகச் சொன்னார்.

மேலும், சரவா மற்றும் மலாக்காவில் தலா நால்வரும் லபுவானில் மூவரும் பகாங்கில் இருவரும் திரங்கானு மற்றும் புத்ரா ஜெயாவில் தலா ஒருவரும் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகினர் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடந்த ஓராண்டு காலத்தில் 5,254 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 


Pengarang :