Anggota polis dan Angkatan Tentera Malaysia (ATM) memeriksa pengguna motosikal yang melalui sekatan jalan raya Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) yang dilaksanakan bermula pada 14 Oktober ketika tinjauan di Jalan Kuching, Kuala Lumpur. Foto: BERNAMA
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

போலீஸ்காரர்கள் லஞ்சம் கேட்கும் காணொளி- வடகிள்ளான் மாவட்ட போலீஸ் விசாரணை

ஷா ஆலம், ஜூலை 4- நான்கு சக்கர இயக்க வாகன ஓட்டுநர் ஒருவரிடம் போலீஸ்காரர்கள் லஞ்சம் கேட்பதை சித்திரிக்கும் காணொளி பரவலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளனர்.

கோலக் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமானில் இம்மாத தொடக்கத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நுருள்ஹூடா முகமது சாலே கூறினார்.

அந்த காணொளியை பகிர்ந்த நபர் அல்லது இச்சம்பவம் தொடர்பானத் தகவல்களை கொண்டிருப்பவர்கள் விசாரணைக்கு உதவ வட கிள்ளான் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த காணொளி டிவிட்டர் கணக்கு ஒன்றின் வாயிலாக நேற்று மறுபடியும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அந்த வாகன ஓட்டுநரை சாலையோரம் தடுத்து நிறுத்தும் இரு போலீஸ்கார ர்கள் அவரிடம் பணம் கோரும் 1.02 விநாடி காட்சி அந்த வாகனத்தின் முகப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இம்மாதம் முதல் தேதி நிகழ்ந்ததை அந்த ஒளிப்பதிவு காட்டுகிறது.


Pengarang :