ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மருத்துவ சாதன தயாரிப்புத துறையில் 2.6 கோடி வெள்ளி முதலீட்டை சிலாங்கூர் பெற்றது

ஷா ஆலம், ஆக 28- மருத்துவ சாதனத் தயாரிப்புத் துறையில் 2 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள முதலீட்டை சிலாங்கூர் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் தயாரிப்புத் துறை சார்ந்த இரு தொழிலியல் திட்டங்களின் வாயிலாக இந்த முதலீடு பெறப்பட்டதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக அடையாளம் காணப்பட்ட அடிப்படை தொழில் துறைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 2 கோடியே 63 லட்சத்து 79 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான அறிவியல் மற்றும் அளவைக் கருவிகள் தயாரிக்கும் இரு திட்டங்களுக்கு மாநில அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதில் 1 கோடியே 40 லட்சத்து 69 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான முதலீடு உள்நாட்டிலிருந்தும் 1 கோடியே 23 லட்சத்து 10 வெள்ளி மதிப்பிலான முதலீடு வெளிநாட்டிலிருந்தும் பெறப்பட்டவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மருத்துவ உபகரணத் தயாரிப்புத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோ தெங் இவ்வாறு சொன்னார்.


Pengarang :