ECONOMYHEALTHNATIONALPBT

பாதிக்கப்பட்ட அனைத்து 463 பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், செப் 2- நீரில் துர்நாற்றம் கலந்த காரணத்தால்  விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து 463 பகுதிகளிலும் இன்று அதிகாலை 6.00 மணியளவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது.

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

நீர் விநியோகம் தொடர்பான  தகவல்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அதிகாரப்பூர் சமூக ஊடகங்களான முகநூல், டிவிட்டர், இண்ட்ஸ்டாகிராம் வாயிலாகவும் https://www.airselangor.com  எனும் அகப்பக்கத்தின் மூலமாகவும் பெறும்படி பொது மக்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

ஜெண்டேராம் ஹிலிர்  நீர் அழுத்த நிலையத்தில் சுத்திகரிக்கப்படாத நீரில் துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டது. இதனால் பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங், புத்ரா ஜெயா, கோல லங்காட் ஆகிய மாவட்டங்களிலுள்ள 463 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.


Pengarang :