ECONOMYNATIONAL

உலு சிலாங்கூரில் மூவினத்தைச் சேர்ந்த 113 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், செப் 25- சிரமத்தில் இருக்கும் பல்லினங்களைச் சேர்ந்த 113 குடும்பங்களுக்கு கோல குபு பாரு பாசார் ராயா செகி ஃப்ரஷ் மற்றும்  உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

உணவு வங்கித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இறைச்சி வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு, காய்கறிகள், மீ, நிலக்கடலை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பொருள்கள் அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக மாவட்ட மன்றத்தின் வர்த்தகப் பிரிவு கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிறுவன சமூக கடப்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பொருள்கள் விநியோகிக்கப்பட்டன என்று அப்பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

மாவட்ட மன்றத்தின் வறுமையை அகற்றும் மற்றும் பசியை அகற்றும் திட்டத்தின் இலக்கை அடையும் விதமாக இத்திட்டத்தின் அமலாக்கம் அமைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தாங் காலி மற்றும் புக்கிட் செந்தோசா பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு 489 உணவுப் கூடைகளை வழங்குவதற்கும் செகி ஃப்ரெஷ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக அது மேலும் தெரிவித்தது.

 


Pengarang :