B
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

94.4 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்

கோலாலம்பூர, அக். 23நேற்று இரவு 11.59 மணி வரை  2 கோடி இருபத்து ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து ஐந்நூற்று முப்பத்து நான்கு பேர் அல்லது 94.4 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சுமார் 2 கோடி இருபத்து எட்டு லட்சத்து மூவாயிரத்து நாநூற்று ஏழு பேர் அல்லது 97.4 பெரியவர்கள் குறைந்தது தங்களின் முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட் நாவ் (covidnow) அகப்பக்கம் கூறியது.

பெரியவர்கள் மற்றும் இளையோரக்கு 1 லட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன் மூலம், கடந்த 24 பிப்ரவரி தொடங்கப்பட்ட பிக் (Pick) எனப்படும் தேசிய கோவிட தடுப்பூசி திட்டத்தின் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின்  எண்ணிக்கை 4 கோடியே எண்பத்து எட்டு லட்சத்து முப்பத்து ஓராயிரத்து இருநூற்று பதிநான்காக உயர்ந்துள்ளது.

நேற்று வரையில் சுமார் 14 லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் அல்லது 46.3 விழுக்காட்டு  12 முதல்  17 வயது வரையிலான பதின்ம வயதினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டனர். சுமார் 25 லட்சத்து நாற்பதாயிரத்து எழுநூற்று தொன்னூற்று நான்கு பேருக்கு அல்லது 80.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Pengarang :