ECONOMYPBT

27 கோடி வெள்ளி மதிப்பீட்டு வரி வசூல்- ஷா ஆலம் டத்தோ பண்டார் தகவல்

ஷா ஆலம், நவ 9– ஷா ஆலம் மாநகர் மன்றம் இவ்வாண்டில் 27 கோடி வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை மதிப்பீட்டு வரியாக வசூல்  செய்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு மத்தியிலும் இந்த தொகை வசூலிக்கப்பட்டது வியப்பளிக்கும் வகையில் உள்ளதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

இவ்வாண்டு இரு தவணைகளில் செலுத்தப்பட்ட மதிப்பீட்டு வரி 95 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட போதிலும் வரியை முறையாக செலுத்திய ஷா ஆலம் வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

இதுவரை 27 கோடி வெள்ளிக்கும் மேல் வசூலித்துள்ளோம். இது நாங்கள் நிர்ணயித்த இலக்கை விட அதிகமானது. என்று ரொக்கமில்லா எம்.பி.எஸ்.ஏ. திட்டத்தை  இன்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் இணையம் வாயிலாக மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதற்குரிய வசதியை ஷா ஆலம் மாநகர் மன்றம் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.


Pengarang :