ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஆர் நோட் அதிகரிப்பு கோவிட்-19 பரவலுக்கான தொடக்க அறிகுறி- நோர் ஹிஷாம் எச்சரிக்கை!

புத்ராஜெயா, நவ 12-  நாட்டில் கோவிட் –19 (ஆர்-நோட்) தொற்றுக்கான சாத்திய விகிதம் 1.0 ஆக உயர்ந்துள்ளது, இது தொற்றுநோய் உயர்வதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆர்-நோட் (R-Naught Rt) என்பது 1.0 என்பது கோவிட்-19 சம்பவங்கள் சமநிலையாக மற்றும் உயர்வு காண்பதற்கான சாத்தியம் உள்ளதை குறிக்கும் தொடக்கக் கட்ட  அறிகுறியாகும்.

 கோவிட்-19 நோய்த் தொற்று உயரும் என்பதற்கான தொடக்க அறிகுறியை ஆர்.டி. நோட் 1.0 மதிப்பு பிரதிபலிக்கிறது. தற்போதைக்கு நோய்த் தொற்று உயரவில்லை என்றாலும் அது உயர்வு காண்பதற்கான சாத்தியம் உள்ளது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஒரு கோவிட்-19 நோயாளி மூலம் எத்தனை பேருக்கு நோய்த் தொற்று பரவுகிறது என்பதை குறிக்கும் அடையாளமாக ஆர்.டி. நோட் விளங்குகிறது.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினும்  இந்த விஷயத்தை நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டிருந்தார். ஊக்கத் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தவர்கள் உடனடியாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

ஆர்.நோட் மதிப்பு உயர்வு கண்டதற்கு மாநில எல்லைகளைக் கடப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமல்ல என்றும் டாக்டர் நோர் ஹிஷாம் விளக்கினார். கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பதற்குரிய வாய்ப்பு இல்லாத ஒன்று கூடும் நிகழ்வுகளும் ஒருவரோடு ஒருவர் நெருக்கத்தில் இருந்து அரட்டையடிப்பதும் இந்த நோய்ப் பரவலுக்கு காரணம் என்றார் அவர்.

இவ்வாறுதான் கோவிட்-19 நோய்த் தொற்று பரவுகிறது. முகக்கவசம் அணிவது மற்றும் எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிப்பது போன்ற நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கும்படி சுகாதார அமைச்சு இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது. இரண்டு முகக்கவசங்களை அணிவது மற்றும் முகத்தை மறைக்கும் பிளாஸ்டிக் கவசங்களை அணிவதன் மூலம் 86 முதல் 90 விழுக்காடு வரையில் நோய்க் கிருமி ஊடுருவலை தடுக்க முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :