ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சரவா மாநிலத் தேர்தலில்  5,522 காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர்

கூச்சிங், டிச 3- சரவா மாநிலத் தேர்தலின் போது  வேட்பு மனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்தின் போது அதிகாரிகள் உள்ளிட்ட 5,522 காவல் துறையினர் பணியில் ஈடுபடுவர். வேட்புமனுத்தாக்கல் மற்றும் பிரசார காலக்கட்டத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாநில குற்றப்புலனாய்வுத் துறை அனைத்து மாவட்டங்களிலும் 47 ஓப்ஸ் சந்தாஸ் குழுக்களை அமைக்கும் என்று சரவா மாநில போலீஸ் ஆணையர் டத்தோ ஹய்டி இஸ்மாயில் கூறினார்.

இது தவிர, அக்காலக் கட்டத்தில் அதிரடிப் படை, பொது ஒழுங்கு மற்றும் கலகத் தடுப்பு பிரிவு, வான் கண்காணிப்பு பிரிவு ஆகியவையும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார். சரவா மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 6 ஆம் தேதியும் தேர்தல் 18  ஆம் தேதியும் நடைபெறும்.


Pengarang :