ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூரில் விலைக் கட்டுப்பாட்டுச் சோதனையில் 260 அமலாக்க அதிகாரிகள்

கோலக் கிள்ளான், டிச 13-  இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் மலேசிய குடும்ப உச்சவரம்பு விலைத்  திட்ட அமலாக்கத்தின் போது பொருள்களின் விலையைக் கண்காணிக்கும் பணியில் 260 அமலாக்க அதிகாரிகளை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு ஈடுபடுத்தும்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது சில்லறை வியாபாரிகள் சிறப்பு இளஞ்சிவப்பு விலைப்பட்டியல் முறையாக பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று இஸ்லாமிய சமயம், ஹாலால் உணவுத் துறை மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

பொருள்களை வாங்குவதற்காக பொது மக்கள் அதிகம் கூடும் பொது சந்தைகள் பாசார் தானி, பேரங்காடிகள் போன்ற இடங்களில் விலைக் கண்காணிப்பை மேற்கொள்வதில் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் பிரிவிலுள்ள ஆறு கிளைகளும் முழுவீச்சில் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 12 ஆம் தேதி வரை 652 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 643 சில்லறை வர்த்தக மையங்களும் ஒன்பது மொத்த வியாபார மையங்களும் அடங்கும். இச்சோதனையின் போது எந்த வர்த்தகர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

Pengarang :