ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

பிறந்தநாள் விருந்தில் சிலாங்கூர் சுல்தான் கலந்து கொண்டார்

ஷா ஆலம், டிச 13- இம்மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட்ட தனது 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கலந்து கொண்டார்.

இந்த விருந்து நிகழ்வில் மேன்மை தங்கிய சுல்தானுடன்  துங்கு பெர்மைசூரி நோராஷிகின் அவர்களும் உடனிருந்ததாக சிலாங்கூர் அரச அலுவலகம் வாயிலாக வெளியிட்ட அறிக்கை கூறியது.

மேன்மை தங்கிய ராஜா மூடா சிலாங்கூர் துங்கு அமீர் ஷாவும் இந்த விழாவுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த விருந்து நிகழ்வில் பங்கேற்றனர்.


Pengarang :